ஒரே ஒரு கிரேனேடு ,இரஷ்யாவின் மொத்த வெடிபொருள் குடோன் க்ளோஸ்

10000 அமெரிக்க டாலர் செலவுள்ள ஒரு சிறிய ட்ரோன் உதவியுடன் இரஷ்யாவின் ஒரு பெரிய வெடிபொருள் கிடங்கை உக்ரேன் வெடிக்கச் செய்துள்ளது.ஒரு சிறிய DJI ட்ரோனில் ஒரு கிரேனேடை பொருத்தி வெடிபொருள் கிடங்கின் மீது வெடிக்கச் செய்துள்ளது உக்ரேன்.

உக்ரேனின் தற்போது இரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ் மகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த வெடிப்பை தொடர்ந்து பெரிய அளவிலான புகைமூட்டம் கிமீ தூரம் பரந்து விரிந்துள்ளதை பு கைப்படங்களில் காண முடிகிறது.

இந்த வெடிபொருள் கட்டிடத்தில் ஆர்டில்லரிகளுக்கு தேவையான பெரிய அளவிலான குண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.