குலசேகரப்பட்டிணத்தில் அமைய உள்ள புதிய இஸ்ரோ தளம்

தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டிணம் என்னுமிடத்தில் இஸ்ரோ ஏவு தளம் அமைக்க உள்ளது.இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.இந்த ஏவு தளத்திற்காக தமிழக அரசு 2000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

கடந்த மாதம் இந்த நிலங்கள் ஒதுக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள் கூறியுள்ளார்.ஏவு தளம் அமைக்கும் முன் சில பாதுகாப்பு மற்றும் சூழ்நிலை தொடர்பான அனுமதிகள் மட்டும் பெற வேண்டி உள்ளது என்பதையும் கூறியுள்ளார்.

இந்த ஏவு தளத்தை அமைக்க குறைந்தது இரு ஆண்டுகள் ஆகும் எனவும் இந்த தளத்தில் ஏவு தளத்தோடு ரேடார் , தரை ஸ்டேசன் , கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.