ASRAAM , ASTRA ஏவுகணைகளை பெறும் Tejas Mk1A போர் விமானம் !!
1 min read

ASRAAM , ASTRA ஏவுகணைகளை பெறும் Tejas Mk1A போர் விமானம் !!

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது 2024ஆம் ஆண்டிற்கு முன்னர் ASRAAM மற்றும் ASTRA BVRAAM ரக ஏவுகணைகளை தயாரித்து Tejas Mk1A போர் விமானத்தில் இணைக்க விரும்புகிறது.

இரண்டு ஏவுகணைகளின் Carriage மற்றும் Captive சோதனைகள் நடைபெற்றுள்ளன, விரைவில் தயாரிப்பாளர் மற்றும் பயன்பாட்டாளர் சோதனைகளை நடத்தவும் ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது Tejas Mk1A இஸ்ரேலிய Derby ER BVRAAM மற்றும் Python-5 WVRAAM ஆகிய ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ASRAAM , ASTRA BVRAAM ஆகியவை மேலும் வலுசேர்க்கும் என்றால் மிகையாகாது.

அதே நேரத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 160 கிலோமீட்டர் செல்லும் அஸ்திரா மார்க்-2 மற்றும் 340 கிலோமீட்டர் செல்லும் அஸ்திரா மார்க்-3 (ASTRA MK2 & ASTRA MK3) ஆகியவற்றை தயாரிக்க உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.