சீனாவுக்கெதிரான தனது பலத்தை அதிகரிக்கும் தைவான்

  • Tamil Defense
  • July 17, 2022
  • Comments Off on சீனாவுக்கெதிரான தனது பலத்தை அதிகரிக்கும் தைவான்

சீனாவிற்கு எதிராக தனது பலத்தை தொடர்ந்து தைவான் அதிகரித்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக வரும் செப்டம்பரில் தைவான் தனது முதல் சொந்த தாக்கும் நீர்மூழ்கியை சோதனைக்கு உட்படுத்த உள்ளது.

தைவான் சொந்தமாக கட்டியுள்ள முதல் டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கியை வரும் செப்டம்பரில் கடலில் இறக்கி சோதனை செய்ய உள்ளது.இந்த தகவலை தைவானின் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது.

கடற்சோதனைக்கு பிறகு இந்த பலவகை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.இந்த நீர்மூழ்கி 2 வருடங்களில் படையில் இணையும்.அதாவது 2025ம் ஆண்டு இந்த நீர்மூழ்கி தைவான் கடற்படையில் இணைக்கப்படும்.இது தவிர மேலும் ஏழு நீர்மூழ்கி கட்டவுள்ளது தைவான்.

இந்த நீர்மூழ்கியில் அமெரிக்கத் தயாரிப்பு Mark 48 Mod 6 Advanced Heavyweight Torpedo மற்றும் Boeing UGM-84L Sub-launched Harpoon Block II கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கும் என கூறப்படுகிறது.