சீன எல்லைக்கு அருகே இரண்டாம் S-400 பாதுகாப்பு அமைப்பு நிலைநிறுத்த திட்டம்
1 min read

சீன எல்லைக்கு அருகே இரண்டாம் S-400 பாதுகாப்பு அமைப்பு நிலைநிறுத்த திட்டம்

அடுத்த இரு முதல் மூன்று மாதத்தில் இரண்டாவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு வடக்கு எல்லையில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீனா தனது போர்விமானங்களை கொண்டு அடிக்கடி அத்துமீறல் செய்து வரும் வேளையில் எஸ்-400 சீன எல்லைக்கு அருகே நிறுத்தப்பட உள்ளது.

இரண்டாவது யூனிட் எஸ்-400 அமைப்பு கப்பல் மற்றும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியா வந்தடைய உள்ளது.அங்கு போர் நடைபெற்று வந்தாலும் இரஷ்யா திட்டமிட்டபடி இந்த அமைப்புகளை இந்தியாவிற்கு அனுப்பி வருகிறது.

இந்திய-சீன எல்லைக்கு நடுவே 10கிமீ யாரும் பறக்க கூடாது என்ற நிபந்தனை உள்ளது.தற்போது சீன விமானங்கள் இதை மீறி வரும் நிலையில் , தற்போது இரண்டாவது எஸ்-400 அமைப்பு எல்லையில் நிறுத்தப்பட உள்ளது.

முதல் எஸ்-400 அமைப்பு இந்தியாவின் வடமேற்கு எல்லை அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.இது சீனா மற்றும் பாக் என இருமுனை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.