உக்ரேனில் உள்ள தரை இலக்குகளை தாக்கியழிக்க இரஷ்யா S-300 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உபயோகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.S-300P மற்றும் S-300V ஆகிய இரு ரகங்களையும் உக்ரேன் மீது இரஷ்யா பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
S-300 ஏவுகணைகள் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் என்று மட்டுமே பெரும்பாலும் அறியப்படுவதும் குறிப்பிடத்தக்கது.மிகோலவ் ஒப்லாஸ்ட் என்னுமிடத்தை குறிவைத்து 12 முறை இரஷ்யா ஏவுகணை ஏவியதாக உக்ரேன் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.