உக்ரேனில் ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கியை பயன்படுத்தும் இரஷ்ய இராணுவம்

  • Tamil Defense
  • July 7, 2022
  • Comments Off on உக்ரேனில் ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கியை பயன்படுத்தும் இரஷ்ய இராணுவம்

ஆளில்லா விமானங்களுக்கு எதிரான இரஷ்யாவின் அதிநவீன மின்காந்த ஆயுதம் தான் ஸ்டுபோர் என்னும் ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கி ஆகும்.இந்த ஆயுதத்தை இரஷ்யா தற்போது உக்ரேனில் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.உக்ரேனின் ஆளில்லா விமானங்களுக்கு எதிராக இந்த துப்பாக்கி சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும் ஸ்டுபோர் ட்ரோன் ஆபரேட்டரின் சிக்னலை துண்டித்துவிடும்.அதன் பிறகு ட்ரோன் தனது செயல்பாட்டை நிறுத்திவிடும்.பிறகு அருகில் தரையிறங்கிவிடும்.உக்ரேன் தற்போது அதிகமாக ட்ரோன்கள் மற்றும் சிறிய காப்டர்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதால் இரஷ்யாவிற்கு இந்த துப்பாக்கியின் தேவை இன்றியமையாதது ஆகும்.

இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் Robotics Research and Test Center இந்த ஸ்டுபோர் ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கியை மேம்படுத்தியுள்ளது.2017ல் இது முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த துப்பாக்கியால் 2கிமீ வரை இயங்க முடியும்.அதாவது 2கிமீ தூரம் வரை வரும் ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்க முடியும்.துப்பாக்கியின் பட்டனை அழுத்திய உடனயே வெளியாகும் electromagnetic pulses ட்ரோனின் சிக்னலை தடை செய்து கீழே விழச் செய்யும்.

உக்ரேன் இராணுவமும் இது போன்ற துப்பாக்கிகளை உபயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது. KVS G-6 என்ற ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கி 3.5 km வரை செயல்படத்தக்கது.