1 min read
புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்த பெண்டகன்- முக்கியத் தகவல்கள்
அமெரிக்காவின் Raytheon technologies corp. நிறுவனம் தயாரித்த புதிய air breathing ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்காவின் பென்டகன் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இதற்கு முன்பும் அமெரிக்கா இது போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
2013 முதல் தொடர் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது மூன்றாவது சோதனை எனவும் பென்டகன் கூறியுள்ளது.இந்த ஏவுகணை ஒலியை விட ஐந்த மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது ஆகும்.
அமெரிக்காவின் லாக்ஹீடு மார்டில் நிறுவனமும் இதே போன்ற ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணையை மேம்படுத்தியுள்ளது.இந்த ஏவுகணையை பென்டகன் இருமுறை சோதனை செய்துள்ளது.அதில் ஒரு முறை மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் ஆர்டரை பெறும் முயற்சியில் இரு நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.