புரோஜெக்ட் 76 ; இந்தியா சொந்த டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கித் தயாரிப்பு

  • Tamil Defense
  • July 18, 2022
  • Comments Off on புரோஜெக்ட் 76 ; இந்தியா சொந்த டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கித் தயாரிப்பு

இந்தியா சொந்தமாக விமானம் தாங்கி கப்பல்கள் தயாரித்தாலும் நீர்மூழ்கிகளை பொறுத்த வரையில் இன்னும் நட்பு நாடுகளை நம்பியே உள்ளது.நேரடியாக இறக்குமதி மூலமும் அல்லது தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்தே நீர்மூழ்கிகளை தயாரித்து வருகிறது.

இந்தியா தற்போது சொந்தமாக டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கி எனப்படும் கன்வென்சனல் நீர்மூழ்கிகள் கட்டுமானம் செய்ய நீண்ட காலமாக முயற்சிசெய்து வருகிறது.கடைசியாக பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து பி-75 திட்டத்தின் கீழ் ஆறு கல்வாரி ரக நீர்மூழ்கிகளை கட்டி படையில் இணைத்து வருகிறது.

அதன் பிறகு பி-75ஐ (P-75I ) திட்டத்தின் கீழ் மேலும ஆறு நீர்மூழ்கிகள் கட்ட முடிவெடுத்து உள்ளது.இதற்காக டென்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.முடிவு எடுப்பது முதல் கொண்டு பல விதமாக தாமதங்கள் வருகின்றன.

தற்போது இந்தியாவே AIP தொழில்நுட்பத்துடன் நீர்மூழ்கி தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவின் Naval Design Bureau இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புரோஜெக்ட் 76 திட்டம் இந்தியா சொந்தமாக நீர்மூழ்கி வடிவமைத்து கட்டும் திட்டமாக இருக்கும்.நீர்மூழ்கி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத் தேவை குறித்த பேச்சுவார்த்தைகளும் திட்டங்களும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் நீர்மூழ்கி வடிவமைப்பு இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.