இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ட்ரோன்- என்ன நடந்தது ?

  • Tamil Defense
  • July 4, 2022
  • Comments Off on இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ட்ரோன்- என்ன நடந்தது ?

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தீல் பாக் ட்ரோன் ஒன்று தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சம்பா மாவட்டத்தில் சிலியரி என்ற கிராமத்தின் அருகே இந்த பாக் ட்ரோனை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்துள்ளனர்.

500மீ உயரத்தில் 12 நிமிடங்களுக்கு இந்த ட்ரோன் தென்பட்டதாக பாதுகாப்பு படை வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.அதிகாலையில் இந்த ட்ரோன் பறந்ததாக தெரிகிறது.12 நிமிடம் தொடர்ந்து பறந்த பிறகு அந்த ட்ரோன் பாகிஸ்தான் பக்கம் திரும்ப சென்றுள்ளது.

ட்ரோனை பார்த்தை இடத்தில் தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.ட்ரோன் ஏதேனும் ஆயுத பார்சலை எல்லைக்கு அருகே விட்டுச் சென்றுள்ளதா என்பது அறிய தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

ட்ரோன் தென்படுதல் இந்த மாதத்தில் இது இரண்டாம் முறையாகும்.இதற்கு முன் சுனூர என்னும் கிராமத்தில் ட்ரோன் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.