எல்லைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகள்- இராணுவ வீரர் வீரமரணம்

  • Tamil Defense
  • July 8, 2022
  • Comments Off on எல்லைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகள்- இராணுவ வீரர் வீரமரணம்

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கும் நடந்த மோதலில் ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.இந்த மோதலில் ஒரு பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான்.

சண்டைக்கு பிறகு ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் ஆயுதங்களை போட்டு புறமுதுகிட்டு ஓடிவிட்டனர்.ஒரு ஏகே துப்பாக்கி,3 மேகசின்கள்,200 ரவுண்டு குண்டுகள் ,கைத்துப்பாக்கி மற்றும் குண்டுகள் ஆகியவற்றை இராணுவ வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவ முயன்றுள்ளனர்.இவர்கள் ஊடுருவுவதை கண்ட இராணுவ வீரர்கள் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளனர்.பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இரவு முழுதும் கண்காணித்த வீரர்கள் எல்லைக்குள் நுழையும் போது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அடர்ந்த வனத்தை சாதகமாக பயன்படுத்தி பயங்கரவாதிகள பின்னடைய ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.