மியான்மருக்கு போர்விமானங்களை ஏற்றுமதி செய்த இரஷ்யா

  • Tamil Defense
  • July 9, 2022
  • Comments Off on மியான்மருக்கு போர்விமானங்களை ஏற்றுமதி செய்த இரஷ்யா

மியான்மர் நாட்டிற்கு இரஷ்யா கடந்த மார்ச்சில் இரு சுகாய்-30 போர்விமானங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மொத்தம் ஆறு விமானங்களை மியான்மர் இரஷ்யாவிடம் இருந்து பெற உள்ளது.அதில் இரு விமானங்கள் தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

இரஷ்யாவின் சுகோய் ஏவியேசன் நிறுவனத் தயாரிப்பு Su-30 இரட்டை என்ஜின் இரு இருக்கை கொண்ட போர்விமானம் ஆகும்.பலபணி போர் விமானம் இதுவாகும்.

கடந்த 2018ல் இரஷ்யா மியான்மர் நாட்டிற்கு ஆறு Su-30 விமானங்களை விற்க முன்வந்தது.இந்த விமானங்கள் தான் தற்போது மியான்மர் விமானப்படையின் நவீன விமானங்கள் ஆகும்.

மியான்மர் விமானப்படை MiG-29 மற்றும் Su-30 போர்விமானங்கள் , Yak-130 பயிற்சி விமானம் மற்றும் Mi-17 , Mi-24 ஆகிய இரஷ்யத் தயாரிப்பு தளவாடங்களை உபயோகித்து வருகிறது. helicopter gunships from Russia.