முக்கியச்செய்தி 28000 கோடிகள் செலவில் புதிய இராணுவத் தளவாடங்கள்- என்னென்ன தளவாடங்கள் ?

  • Tamil Defense
  • July 28, 2022
  • Comments Off on முக்கியச்செய்தி 28000 கோடிகள் செலவில் புதிய இராணுவத் தளவாடங்கள்- என்னென்ன தளவாடங்கள் ?

பாதுகாப்பு படைகளுக்கு ஸ்வார்ம் ட்ரோன்கள், கார்பைன் மற்றும் குண்டுதுளைக்காத உடைகள் உட்பட பல்வேறு தளவாடங்கள் சுமார் 28,732 கோடிகள் செலவில் வாங்கப்பட உள்ளது.இதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எல்லைக்கோடு பகுதியில் எதிரியின் ஸ்னைப்பர் தாக்குதலில் இருந்து வீரர்களை பாதுகாக்க இந்த குண்டுதுளைக்காத உடைகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

இது தவிர 4 லட்சம் Quarter Battle Carbines துப்பாக்கிகள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளன.ஹைபிரிட் போர்முறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு/தடுப்பு ஆபரேசன்கள் மற்றும் எல்லைக்கோடு பாதுகாப்பிற்கு இந்த துப்பாக்கிகள் உதவும்.

மேலும் நவீன போர்முறைக்கு ஏற்றவாறு நமது திறனையும் வலுப்படுத்த Autonomous Surveillance மற்றும் Armed Drone Swarms விமானங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளன.இவை பாதுகாப்பு படைகளின் வலிமைக்கு வலு சேர்க்கும்.

மேலும் இந்திய கடலோர காவல் படைக்கு 14 அதிவேக ரோந்து கப்பல்கள்( fast patrol vessels) வாங்கவும் கடற்படைக்கு upgraded 1250KW capacity Marine Gas Turbine Generator வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.