மிக்-21 விமான விபத்து முக்கியத் தகவல்கள்

  • Tamil Defense
  • July 29, 2022
  • Comments Off on மிக்-21 விமான விபத்து முக்கியத் தகவல்கள்

இராஜஸ்தானின் பார்மரில் நேற்று இரவு மிக்-21 பைசன் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் வீரமரணம் அடைந்துள்ளனர்.இரவு 9.10 மணி அளவில் இந்த விமான விபத்து நடைபெற்றதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இராஜஸ்தானின் உத்தர்லே விமானப் படை தளத்தில் இருந்து இரு இருக்கை மிக்-21 விமானம் பயிற்சிக்காக பறந்ததாக விமானப்படை கூறியுள்ளது.இரவு 9.10 மணி அளவில் பார்மர் என்னமிடத்திற்கு அருகே இந்த விமானம் விபத்துக்குள்ளானது.விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை விமானப்படை பதிவு செய்துள்ளது.

விபத்து குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.விமான விபத்தை அடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் விமானப்படை தளபதியிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.