1 min read
கடல்சார் த்ருவ் வானூர்தி முதல் பறத்தல் சோதனை
ஹால் நிறுவனத்தின் அதிநவீன இலகுரக வானூர்தியான த்ருவ் ( சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரகம் ) வானூர்தியின் கடற்படை ரகம் தனது முதல் பறத்தல் சோதனையை மேற்கொண்டுள்ளது.பெங்களூருவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்திய கடற்படை இயக்கும் வண்ணம் இந்த வானூர்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை கடந்த 18 வருடங்களாக த்ருவ் வானூர்தியை இயக்கி வருகின்றன.ஆனால் பெரிய உருவம் காரணமாக இந்த வானூர்தியை போர்க்கப்பல்களில் இருந்து இயக்க முடியாது.இந்த புதிய வகையில் இறக்கைகள் அவ்வாறு கப்பல்களில் இருந்து இயங்கும் வண்ணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.