பூடானுக்காக செயற்கைகோள் தயாரிக்கும் இந்தியா- பூடானுக்கு உதவி

  • Tamil Defense
  • July 14, 2022
  • Comments Off on பூடானுக்காக செயற்கைகோள் தயாரிக்கும் இந்தியா- பூடானுக்கு உதவி

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் அவர்கள் வெளியிட்ட தகவல்படி , இஸ்ரோ மற்றும் பூடான் அரசு இணைந்து பூடானுக்காக ஒரு சிறிய செயற்கைகோளை மேம்படுத்தியுள்ளது.மேலும் இஸ்ரோ பூடான் பொறியாளர்களுக்கு செயற்கைகோள் இயக்கவும் இஸ்ரோ பயிற்சி அளித்து வருகிறது.

செயற்கைகோள் தயாரிப்பில் பூடான் நாட்டு அறிவியலாளர்களும் கலந்து கொண்டதாக இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.தற்போது வரை செயற்கைகோள் இயக்குவதற்கான பயிற்சியை பூடான் பொறியியலாளர்களுக்கு வழங்கி வருகிறது இஸ்ரோ.

பூடான் தவிர மற்ற அண்டை நட்பு நாடுகளுடனும் இணைந்து இஸ்ரோ பணிபுரிந்து வருகிறது.