கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற கிலோ ரக நீர்மூழ்கி
இந்திய கடற்படையில் இருந்து கிலோ ரக நீர்மூழ்கி ஒன்று ஓய்வு பெற்றுள்ளது.கடந்த மூன்று தலைமுறைகளாக இந்திய கடற்படையின் கடலடி பிரிவின் முழுகெழும்புகளாக இந்த கிலோ ரக நீர்மூழ்கிகள் உள்ளன.அவற்றுள் ஒரு நீர்மூழ்கி தான் ஐஎன்எஸ் சிந்துத்வாஜ் எனும் நீர்மூழ்கி ஆகும்.பெரிய அளவில் விழா அல்லது ஏதும் கொண்டாட்டங்கள் இல்லாமல் அமைதியாக படையில் இருந்து இந்த நீர்மூழ்கிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
1987ல் சோவியத் யூனியனிடம் இருந்து இந்த நீர்மூழ்கி பெறப்பட்டு கடற்படையில் இணைக்கப்பட்டது.தற்போது 35 வருடங்களுக்கு பிறகு இந்த நீர்மூழ்கிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் பத்து நீர்மூழ்கிகள் பெறப்பட்டு தற்போது 7 நீர்மூழ்கிகள் தான் படையில் உள்ளன.கடந்த 2013ம் ஆண்டு விபத்தில் ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழ்கியை நாம் இழந்தோம்.அதன் பிறகு ஐஎன்எஸ் சிந்துவீர் என்ற நீர்முழ்கி கடந்த வருடம் மியான்மர் கடற்படைக்கு வழங்கப்பட்டது.தற்போது ஐஎன்எஸ் சிந்துத்வாஜ் ஓய்வு பெற்றுள்ளது.