ஜெர்மனி தனது விமானப்படையை நவீனப்படுத்தும் வகையிலும் வலுப்படுத்தும் விதமாகவும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களான F35 ஐ வாங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அமெரிக்க அரசு சுமார் 35 F35-A ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது, கடந்த மார்ச் மாதமே இதுபற்றிய தகவலை ஜெர்மானிய வேந்தர் ஒலாஃப் வெளியிட்டார்.
இந்த திட்டம் ஜெர்மனியின் 100 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒருபகுதி ஆகும், ஏற்கனவே பயன்படுத்தி வரப்படும் EUROFIGHTER TYPHOON யூரோஃபைட்டர் டைபூன் ரக விமானங்ளுக்கு மாற்று என கூறப்படுகிறது.
மேலும் கூடுதல் தகவல் என்னவெனில் தற்போது 60 அமெரிக்க B61 ரக அணு ஆயுதங்கள் ஜெர்மனியின் பீயூஷெல் விமானப்படை தளத்தில் நேட்டோ அமைப்பின் பங்கீட்டு அடிப்படையில் வைக்கப்பட்டு உள்ளன.
ஜெர்மனி அவற்றை போர் காலத்தில் தனது டைபூன் விமானங்களில் பொருத்தி தாக்குதல் நடத்தி கொள்ள முடியும் இனி இந்த பணியை அதிநவீன F35 ஸ்டெல்த் போர் விமானங்கள் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஜெர்மனி சுமார் 75 AGM-158 JASSM ER /XR ரக தொலைதூர துல்லிய தாக்குதல் க்ரூஸ் ஏவுகணைகளையும் அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.