பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு வாங்க உள்ளதா இந்தோனேசியா ?

  • Tamil Defense
  • July 20, 2022
  • Comments Off on பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு வாங்க உள்ளதா இந்தோனேசியா ?

இந்தோனேசியா இந்தியத் தயாரிப்பு பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்க ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தோனேசியா பிரம்மோஸ் அமைப்புகளை வாங்கும் பட்சத்தில் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு பெறும் இரண்டாவது நாடாக இந்தோனேசியா ஆகும்.இதற்கு முன் பிலிப்பைன்ஸ் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கப்பலில் பொருத்தப்படக்கூடிய கப்பல் எதிர்ப்பு ரக பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை இந்தோனேசியா வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.ஆசியான் நாடுகள் இந்தியத் தயாரிப்பு இராணுவ தளவாடங்கள் வாங்க ஆர்வங்கள் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வியட்நாம் பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணை அமைப்புகளை வாங்க தனது ஆர்வத்தை வெளியிட்டுள்ளது.அதே போல மலேசியாவும் வெளியிட்டுள்ளது.இந்தியாவும் பிரம்மோசை விற்க இந்நாடுகளுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.