விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை கடற்படைக்கு டெலிவரி செய்த CSL

  • Tamil Defense
  • July 28, 2022
  • Comments Off on விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை கடற்படைக்கு டெலிவரி செய்த CSL

கொச்சின் கப்பல் கட்டும் தளத்திடம் இருந்து விக்ராந்த் விமானம்தாங்கி கப்பலை தற்போது கடற்படை பெற்றுள்ளது.இத்துடன் விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து உள்நாட்டிலேயே கட்டும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்த கப்பல் 76%ம் இந்தியத் தயாரிப்புகளை கொண்டுள்ளது.அடுத்த மாதம் இந்தக் கப்பலை அதிகாரப்பூர்வமாக இந்திய கடற்படை படையில் இணைக்கும்.இந்தியா தனது 75வது சுதந்திர விழாவை கொண்டாட உள்ளது.இந்த விழாவில் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலும் படையில் இணைக்கப்படும்.

இத்துடன் இந்திய கடற்படையில் இரு விமானந்தாங்கி கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும்.மேலும் இந்த கப்பல் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு பணியை அதிகரிக்க இந்தியாவிற்கு உதவும்.

20000 கோடிகள் செலவில் இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
கப்பலில் உள்ள 88 MW power தரக்கூடிய நான்கு கேஸ் டர்பைன் என்ஜின் உதவியுடன் 28 நாட் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். 262மீ நீளமுள்ள இந்தக் கப்பல் 45000 டன்கள் எடையுடையது ஆகும்.

இந்தக் கப்பல் கட்டுமானத்தில் BHEL, BEL, Keltron, GRSE, Kirloskar, Larsen & Toubro (L&T), Wartsila India உட்பட 100 நிறுவனங்கள் இந்த கப்பல் கட்டுமானத்தில் உதவி செய்துள்ளன.அதாவது இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.