ரபேலா ? F/A-18 விமானமா ?- விரைவில் கடற்படை முடிவு

  • Tamil Defense
  • July 5, 2022
  • Comments Off on ரபேலா ? F/A-18 விமானமா ?- விரைவில் கடற்படை முடிவு

இந்திய கடற்படை தனது விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்குதவற்காக புதிய விமானங்களை வாங்குவதாக உள்ளது.இதற்காக Rafale M மற்றும் F-18 ஆகிய இரு விமானங்களையும் சோதனை செய்து வந்தது.தற்போது இரு விமானங்களின் சோதனைகளும் முடிவு பெற்றுள்ளது.

Rafale M அல்லது F-18 விமானம் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது எனினும் மொத்தம் எத்தனை விமானங்கள் வாங்கப்பட உள்ளன என்பது குறித்த தகவல்கள் இல்லை.மேலும் தற்போது அவரச காலத் தேவைக்காக மட்டுமே இந்த விமானங்களை கடற்படை வாங்க உள்ளது.அதாவது இந்திய கடற்படைக்காக இரட்டை என்ஜின் கொண்ட விமானம் ஒன்றை இந்தியா மேம்படுத்தி வருகிறது.அந்த விமானம் தயாராகும் வரை தற்காலிக தேவைக்காக இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளன.

தற்போது இந்தியா இயக்கி வரும் ஒற்றை விமானந்தாங்கி கப்பலில் இரஷ்யத் தயாரிப்பு மிக்-29கே ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த விமானங்களில் சில குறைபாடுகள் காரணமாக இந்தியா தற்போது Rafale M அல்லது F-18 விமானம் வாங்க உள்ளது.