45 TEDBF சுதேசி போர் விமானங்களை வாங்க உள்ள இந்திய கடற்படை !!
இந்திய கடற்படை ADA எனப்படும் வானூர்தி மேம்பாட்டு முகமையிடம் 45 சுதேசி TEDBF ரக போர் விமானங்களை HAL நிறுவனத்திடம் இருந்து வாங்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது.
இந்த TEDBF ரக போர் விமானங்கள் இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயங்கும் வகையில் பிரத்யேகமாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
4.5 தலைமுறை போர் விமானங்களான இவை 2031ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணையும் 2035 ஆம் ஆண்டு வாக்கில் தற்போது கடற்படையில் உள்ள அனைத்து MIG29 – K ரக விமானங்களுக்கும் மாற்றாக அமையும் என கூறப்படுகிறது.
இந்திய கடற்படை தற்போது உடனடியாக 27 போர் விமானங்களை வாங்க தேடல் நடத்தி வருகிறது, TEDBF விமானங்களை இரண்டு கட்டங்களாக வாங்கவும் அப்போது இந்திய கடற்படையில் 80க்கும் அதிகமான TEDBF போர் விமானங்கள் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் இந்திய விமானப்படைக்கும் TEDBF விமானத்தின் மற்றொரு வடிவத்தை ADA தயாரித்து தர முன்வந்துள்ளது இது கடற்படை ரகத்தை விட 1.5 டன்கள் எடை குறைவாக இருக்கும் ஆனால் விமானப்படை இதற்கு பதில் அளிக்கவில்லை என்பதாக தெரிகிறது.