
18 வகையான இராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தற்போது தடை விதித்துள்ளது.இந்த 18 தளவாடங்கும் இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.இலகுரக டேங்க் , self-healing minefields மற்றும் வீரர்களுக்கான “plug-and-play housing” ஆகியவை இறக்குதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
127 millimetre நேவல் கன் இறக்குமதி செய்யவும் Indian multi-role helicopter (IMRH) மற்றும் stand-off airborne jammer கருவி இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2020 முதல் பாதுகாப்பு அமைச்சகம் இறக்குதிக்கு தடை விதித்து வருகிறது.மூன்று பட்டியல்கள் இதுவரை வெளியிட்டுள்ளது.ஆகஸ்டு 2020ல் 101 தளவாடங்களும், ஜீன் 2021ல் 108 தளவாடங்களும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டன.