மியான்மர் கடற்பகுதியில் இந்தியத் தயாரிப்பு டோர்பிடோ – காரணம் என்ன ?

  • Tamil Defense
  • July 14, 2022
  • Comments Off on மியான்மர் கடற்பகுதியில் இந்தியத் தயாரிப்பு டோர்பிடோ – காரணம் என்ன ?

இந்திய தயாரிப்பு இலகுரக டோர்பிடோ ஒன்று மியானாமர் கடலோர பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.LWT- XP இலகுலக டோர்பிடோ மியான்மர் நாட்டின் கடலோர பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

2017ல் இந்தியா மியான்மருக்கு 37.9 மில்லியன் டாலர்களுக்கு சென்யா இலகுரக டோர்பிடோக்களை ஏற்றுமதி செய்தது.2019முதல் இந்த டோர்பிடோக்களை மியான்மர் கடற்படை பெற தொடங்கி , படையில் இணைத்தது.

ஆனால் இந்தியா கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் கொண்ட டோர்பிடோக்களை தான் மியான்மர் கடற்படைக்கு டெலிவரி செய்த வேளையில் இந்த டோர்பிடோ பயிற்சிக்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக டோர்பிடோவாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்சியின் போது இந்த டோர்பிடோவை ஏவி மியான்மர் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு பின்பு டோர்பிடோவை கையகப்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பொதுவாக கடற்படைகள் டம்மி ஏவுகணைகள் மற்றும் டோர்பிடோக்கள் வைத்து பயிற்சி மேற்கொண்டால் பயிற்சி முடிந்த பிறகு அவற்றை திரும்ப எடுத்துக்கொள்வது வழக்கமாகும்.

மியான்மர் கடற்படை சில வாரங்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது இந்த ஏவுகணை ஏவப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.