நேற்று காலை காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள வானிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு படையினர் களமிறங்கினர்.
ஒரு பாகிஸ்தானியர் உட்பட மூன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டில் அவர்கள் சரியாக இருக்கும் பகுதியை அடையாளம் காண உடலில் கேமரா பொருத்தப்பட்ட பஜாஜ் மற்றும் அக்ஸேல் ஆகிய இரண்டு நாய்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இரண்டு நாய்களும் வருவதை கண்ட பயங்கரவாதிகள் நாய்களை நோக்கி சுட்டதில் அக்ஸேல் வீரமரணம் அடைந்தது.
இதை தொடர்ந்து நடைபெற்ற பலத்த சண்டையில் மூன்று வீரர்கள் காயபடைந்தனர் இரண்டு பயங்கரவாதிகள் தப்பி சென்றனர் தற்போது தேடுதல் வேட்டை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.