இந்திய தரைப்படைக்கு TATA குழுமத்தின் புதிய அதிநவீன கவச வாகனங்கள் லடாக்கில் களமிறக்கம் !!
லடாக்கில் சீன எல்லை கட்டுபாட்டு கோடு அருகே இந்திய தரைப்படை தனது புதிய அதிநவீன கவச சண்டை வாகனங்களை களமிறக்கி பயன்படுத்த துவங்கி உள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாகனங்கள் TATA குழுமத்தின் ஒரு பிரிவான Tata Advanced Systems Limited நிறுவனத்தால் வடிவமைத்து முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது சிறப்பாகும்.
சுமார் 16,000 அடி உயரம் கொண்ட பகுதிகளிலும் இயங்கும் திறன் கொண்ட இவை ஒட்டுநர் உட்பட 12 வீரர்களை சுமக்கும் மேலும் 360 டிகிரி கோணத்தில் சுழன்று சுடக்கூடிய இயந்திர துப்பாக்கி ஒன்று வாகனத்தில் மேலே உள்ளது
இதுதவிர இந்த வாகனத்தால் வீரர்களை சண்டை நடைபெறும் பகுதிகளுக்கு விரைவாக கொண்டு செல்ல முடியும் அதுதவிர ரோந்து கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.