லடாக்கில் இயக்க புதிய காம்பட் வாகனங்களை படையில் இணைத்த இராணுவம்

  • Tamil Defense
  • July 30, 2022
  • Comments Off on லடாக்கில் இயக்க புதிய காம்பட் வாகனங்களை படையில் இணைத்த இராணுவம்

லடாக்கில் 16000 அடி உயரத்தில் இயக்க புதிய வேகமாக செல்லக்கூடிய காம்பட் வாகனங்களை படையில் இணைத்துள்ளது இந்திய இராணுவம்.Infantry Protected Mobility Vehicle எனப்படும் இந்த வாகனங்கள் கிழக்கு லடாக்கில் சோதனை செய்யப்பட்ட பிறகு படையில் இணைக்கப்பட்டுள்ளது.

360 டிகிரியில் இயங்கக்கூடிய இயந்திர துப்பாக்கி இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.வாகனத்தில் 12 வீரர்கள் செல்ல முடியும்.மற்றும் வாகனத்தில் 10 இடங்கள் வழியாக வெளியே சுட முடியும்.மேலும் சிறிய அளவு சுடுதல்களில் இருந்து வீரர்களை பாதுகாக்கும் கவச அமைப்பு , அதாவது சிறிய ரக குண்டு துளைக்காத வசதி இந்த வாகனத்தில் உள்ளது.

இந்த வாகனங்களில் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இவற்றை விரைவாக அவசர பணிகளுக்கு பயன்படுத்த முடியும்.இரவு பகல் என எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.லடாக் போன்ற பீடபூமி பகுதிகளில் உபயோகிக்க ஏற்ற வாகனம் இதுவாகும்.

தற்போது முதல் தொகுதி வாகனங்கள் லடாக்கில் வைத்து படையில் இணைக்கப்பட்டு வருகின்றன.இந்த வாகனத் தயாரிப்புகள் அதிகரிக்கும் பொருட்டு மற்ற பயங்கரவாத எதிர்ப்பு பகுதிகளில் இந்த வாகனம் படையில் இணைக்கப்படும்.

Tata Advanced Systems Limited நிறுவனம் இந்த கவச வாகனங்களை தயாரித்து வருகிறது.2020ல் இந்தியா சீனா மோதல் ஏற்பட்ட போது இது போன்ற வாகனங்களுக்கான தேவை ஏற்பட்டது.

தற்போது இந்த வாகனங்கள் படையில் இணைக்கப்பட்டு வருகிறது.இந்த வாகனங்கள் உதவியுடன் ரோந்து பணிகள் மற்றும் அவரச ஆபரேசன்கள் நடத்த முடியும்.