2021-2022ம் ஆண்டு கணக்கின்படி இந்தியா கிட்டத்தட்ட 13000 கோடிகள் அளவிற்கு இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளது.4-5 வருடத்திற்கு முன்பை விட தற்போது எட்டு மடங்கு அதிகமாக இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்கா, தென்கிழக்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.கடந்த வருடத்தை விட 54.1 சதவீதம் அதிகமாக இந்த வருடம் இராணுவ தளவாடங்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய பொதுநிறுவனங்கள் 30% மற்றும் தனியார் நிறுவனங்கள் 70% ஏற்றுமதியில் பங்களித்துள்ளன.கொரானா காரணமாக கடந்த இரு வருடங்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டது.தற்போது மீண்டும் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தளவாட ஏற்றுமதி Rs 8,434 ( 2020-21), Rs 9,115 (2019-20) மற்றும் Rs 2,059 ( 2015-16) ஆகிய ஆண்டுகளில் இருந்தது.