இந்தியாவுக்கு சுற்றுபயணமாக மாலத்தீவு நாட்டின் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்லா ஷமால் வந்துள்ளார் தற்போது அவர் தலைநகர் தில்லியில் உள்ளார்.
அங்கு இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவை சந்தித்து பேசி ஆலோசனை மேற்கொண்டார், இதனையடுத்து இருவரும் நினைவு பரிசுகளை பரிமாறி கொண்டனர்.
இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பில் இந்தியாவின் மிக முக்கியமான கூட்டாளி மாலத்தீவு என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் பலமான பாதுகாப்பு மற்றும் அரசியல் உறவுகள் உள்ளது.
கடந்த மார்ச் மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மாலத்தீவு சென்ற போது கடலோர கண்காணிப்பு ரேடார் ஒன்றை ஒப்படைத்தார், ஏப்பம் மாதம் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் மாலத்தீவு சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசியது போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கது.