ஆஸ்திரேலியாவிற்கு போர்விமானங்களை அனுப்ப உள்ள இந்தியா

  • Tamil Defense
  • July 5, 2022
  • Comments Off on ஆஸ்திரேலியாவிற்கு போர்விமானங்களை அனுப்ப உள்ள இந்தியா

ஆஸ்திரேலியா விமானப்படை நடத்த உள்ள பிட்ச் பிளாக் போர்பயிற்சிக்கு இந்திய விமானப்படை தனது சுகாய் விமானங்களை அனுப்ப உள்ளது.இந்த போர்பயிற்சியில் ரபேல் உடன் பிரான்ஸ் , டைபூன் விமானத்துடன் ஜெர்மனி, F2 விமானத்துடன் ஜப்பான் ,F15SG மற்றும் F-16 விமானங்களுடன் சிங்கப்பூர் , F-16A விமானத்துடன் இந்தோனேசியா மற்றும் F-15C விமானத்துடன் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு இந்திய விமானப்படை இந்த பயிற்சியில் பங்கேற்றது.நான்கு சுகாய் விமானங்கள் ,1 சி-130 விமானம் மற்றும் ஒரு சி-17 விமானத்துடன் அந்த பயிற்சியில் இந்தியா கலந்து கொண்டது.

இந்த வருடம் 15 நாடுகளை சேர்ந்த விமானப்படைகள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளது.