இந்திய இராணுவத்திற்கான இலகுரக டேங்க் குறித்த முக்கிய அப்டேட்

  • Tamil Defense
  • July 1, 2022
  • Comments Off on இந்திய இராணுவத்திற்கான இலகுரக டேங்க் குறித்த முக்கிய அப்டேட்

இந்திய இராணுவத்திற்காக டிஆர்டிஓ மேம்படுத்தும் இலகு ரக டேங்க் அடுத்த வருடம் தயாராக இருக்கும் என டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார்.

இந்தியாவினுடைய Larsen & Toubro (L&T) நிறுவனத்துடன் இணைந்து டிஆர்டிஓ இந்த இலகுரக டேங்கை மேம்படுத்தும் எனவும் இந்த டேங்க் அடுத்த வருடம் தயாராக வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலகுரக டேங்க் மேம்பாடு முழு வேகத்தில் செல்வதாகவும் டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார்.2023ல் டேங்க் முழுத் தயாரிப்புக்கு தயாராகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

டேங்க் தயாரிப்பு முடியும் பட்சத்தில் இந்த டேங்குகளை இராணுவம் ஆர்டர் செய்யும்.இந்த டேங்குகளை L&T நிறுவனம் தயாரித்து இராணுவத்திற்கு வழங்கும்.