சீன எல்லையில் சாலைக் கட்டமைப்புகளை அதிகரிக்கும் இந்தியா – முழுத் தகவல்கள்

  • Tamil Defense
  • July 28, 2022
  • Comments Off on சீன எல்லையில் சாலைக் கட்டமைப்புகளை அதிகரிக்கும் இந்தியா – முழுத் தகவல்கள்

கடந்த ஐந்து வருடங்களாக இந்தியா , சீனா எல்லைக்கு அருகே சாலைக் கட்டமைப்புகளை அதிகரித்துள்ளது.கடந்த இரு வருடங்களாக இந்தியா-சீனா மோதல் தொடர்ந்து வரும் வேளையில் இந்தியா எல்லையில் சாலை மற்றும் இராணுவம் தொடர்பான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஐந்து வருடங்களாக சீன எல்லையில் 15477 கோடிகள் ரூபாய் செலவில் 2088கிமீ அளவில் சாலைக் கட்டமைப்பை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.இவை வீரர்களை முன்புற களத்திற்கு விரைவாக கொண்டு செல்லவும் மற்றும் எல்லையோர கிராம மக்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

எல்லைச் சாலைக் கட்டமைப்பு குறித்த தகவல்களை லோக் சபாவில் யூனியன் அமைச்சர் அஜய் பாட் அவர்கள் உறுதிபடுத்தியுள்ளார்.

இதே போல பாக் எல்லையிலும் சாலைக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.சுமார் Rs 4,242.38 கோடிகள் செலவில் 1,336.09 km அளவிலான சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மியான்மர் எல்லையிலும் 882.52 கோடிகள் செலவில் 151.15கிமீ அளவிலான சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.வங்கதேச எல்லையில் 165.45 கோடிகள் செலவில் 19.25கிமீ அளவிலான சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.