சீன எல்லைக்குச் செல்ல உள்ள தேஜஸ் ஸ்குவாட்ரான்
1 min read

சீன எல்லைக்குச் செல்ல உள்ள தேஜஸ் ஸ்குவாட்ரான்

இந்திய விமானப்படையின் 45 ஸ்குவாட்ரான் ஃபிளையிங் டேக்கர்ஸ் தேஜஸ் படையணி கிழக்கு எல்லைக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதிகரித்து வரும் சீன போர்விமான ஊடுருவல்களை எதிர்கொள்ள சூலூரில் இருந்து தேஜஸ் படையணி தற்போது சீன எல்லைக்கு நகர்த்தப்படுகிறது.

தற்போது சீன விமானங்களுக்கு எதிராக இந்திய விமானப்படை மிக்-29 மற்றும் மிராஜ்-2000 விமானங்களை பயன்படுத்தி வருகிறது.தற்போது தேஜஸ் மற்றும் ரபேல் விமானங்களை களமிறக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

தேஜஸ் லடாக் பிராந்தியத்தில் செயல்பட வல்லது.ஏற்கனவே லடாக் பிராந்தியத்தில் கடுங்குளிரில் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.