கப்பல்களுக்கான டீசல் என்ஜினை உருவாக்க உள்ள இந்தியா
இந்தியா கப்பல்களுக்கு பயன்படுத்தப்படும் டீசல் என்ஜினை உருவாக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.இது இராணுவத் தொழில்நுட்ப மேம்பாடுகளில் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.
இது தவிர முப்படைகளின் தேவைக்கு கனரக எடை தூக்கி வானூர்தியும் மேம்படுத்த உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.இந்த இரு தொழில்நுட்ப மேம்பாடுகளிலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா தனக்கு தேவையான தளவாடங்களை தானே தயாரித்து கொள்வதில் தற்போது முனைப்புடன் உள்ளது.இராணுவ தளவாட இறக்குமதியை குறைக்கவும் அதே நேரம் அவற்றை இந்தியாவில் தனியாகவே அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுன் இணைந்தோ அல்லது தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்றோ இந்த தளவாடங்களை தயாரித்து வருகிறது.
இதுமட்டுமட்டுமல்லாமல் தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும் முயற்சித்து வருகிறது.கடந்த நான்கைந்து ஆண்டுகளில் இந்தியாவின் தளவாட இறக்குமதி 21 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.குறைந்தததோடு மட்டுமல்லாம் இந்தியத் தயாரிப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும் பெருமுயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
கடந்த வருடம் 13000 கோடிகள் அளவிற்கு இராணுவ தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.வருங்காலங்களில் இது மிக அதிகமாகவே இருக்கும்.