புதிய ஐஎன்எஸ் துணகிரி போர்க்கப்பல் குறித்த முக்கிய தகவல்கள்

  • Tamil Defense
  • July 14, 2022
  • Comments Off on புதிய ஐஎன்எஸ் துணகிரி போர்க்கப்பல் குறித்த முக்கிய தகவல்கள்

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் புரோஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் கட்டிய பிரைகேட் ரக போர்க்கப்பலான ஐஎன்எஸ் துனகிரி போர்க்கப்பல் வெள்ளியன்று கடலில் ஏவப்பட உள்ளது.இந்த விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார்.

புரோஜெக்ட் 17ஏ திட்டத்தில் கட்டப்பட்டு வரும் போர்க்கப்பல்களில் இது நான்காவது கப்பல் ஆகும்.உத்ரகண்டில் உள்ள ஒரு மலைத்தொடரின் பெயர் இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.சிவாலிக் ரக கப்பல்களின் மேம்படுத்த வகை தான் இந்த பிரைகேட் கப்பல்கள் ஆகும்.

பி17ஏ திட்டத்தின் முதல் இரு கப்பல்கள் 2019 மற்றும் 2020ல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.மூன்றாவது கப்பலான ஐஎன்எஸ் உதயகிரி இந்த வருட மே மாதத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.தற்போது நான்காவது கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

பி-17ஏ திட்டத்தில் மொத்தமாக ஏழு கப்பல்கள் கட்டப்பட உள்ளன.இந்த கப்பல்களினன பாகங்களில் 75% மேல் இந்திய நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டவை ஆகும்.இந்த கப்பல்களில் நான்கு கப்பல்களை மும்பையில் மசகான் நிறுவனமும் மீதமுள்ள மூன்றை கொல்கத்தா கார்டன் ரிச் கப்பலும் கட்டுகின்றன.