இந்தியாவின் SWIFT ட்ரோன் சோதனை – முழுத் தகவல்கள்

  • Tamil Defense
  • July 2, 2022
  • Comments Off on இந்தியாவின் SWIFT ட்ரோன் சோதனை – முழுத் தகவல்கள்

Autonomous Flying Wing Technology Demonstrator எனப்படும் ஸ்விப்ட் ட்ரோனை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இது ஆகப் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள சோதனை தளத்தில் இந்த ட்ரோன் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா கடக் என்ற ஸ்டீல்த் காம்பட் ட்ரோன் ஒன்றை மேம்படுத்தி வருகிறது.அதற்கு முன்னோடி தான் இந்த ஸ்விப்ட் ட்ரோன்.ஸ்டீல்த் ட்ரோனுக்கு தேவையான தொழில்நுட்பங்களை தற்போது டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.

இந்த ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ-வின் பிரத்யேக பிரிவான Aeronautical Development Establishment வடிவமைத்து தயாரித்துள்ளது.
இந்த ட்ரோனின் ஏர்பிரேம், undercarriage மற்றும் மொத்த கட்டுப்பாடு அமைப்புகள் மற்றும் ஏவியோனிக்ஸ் அமைப்புகள் ஆகியவை நமது டிஆர்டிஓ மேம்படுத்தியது ஆகும்.