பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் இருந்து மாக் 3 வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையை ஆர்டர் செய்துள்ளது.மேலும் இது இந்தியா-பிலிப்பைன்ஸ் உறவின் தொடக்கம் தான் என பிலிப்பைன்ஸ் ஏற்கனவே கூறியிருந்தது.
பிலிப்பைன்ஸ் மேலதிக இந்தியத் தயாரிப்பு தளவாடங்களை வாங்க உள்ளது.தற்போது பிலிப்பைன்ஸ் இந்தியத் தயாரிப்பு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை தனது விமானப்படை மற்றும் இராணுவத்திற்கு வாங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் சில மாதங்களுக்கு முன்பு தான் இஸ்ரேலின் Rafale advanced defense systems நிறுவனத்திடம் இருந்து ஸ்பைடர் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை பெற்றது.தற்போது அதிக தூரம் செல்லக்கூடிய புதிய ஏவுகணை அமைப்பை பிலிப்பைன்ஸ் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியத் தயாரிப்பு MR-SAM வான்பாதுகாப்பு அமைப்பு 110கிமீ தூரம் வரை சென்று தாக்கக் கூடியது.அதே போல இந்தியத் தயாரிப்பு Akash- NG வான் பாதுகாப்பு ஏவுகணை 80கிமீ வரை சென்று தாக்குதல் நடத்த கூடியது.தற்போது இந்தியா இவ்விரண்டு அமைப்புகளையுமே பிலிப்பைன்சிற்கு வழங்க தயாராக உள்ளது.