இந்திய நீர்மூழ்கியில் உள்நாட்டு தயாரிப்பு AIP அமைப்பு : டிஆர்டிஓ

  • Tamil Defense
  • July 1, 2022
  • Comments Off on இந்திய நீர்மூழ்கியில் உள்நாட்டு தயாரிப்பு AIP அமைப்பு : டிஆர்டிஓ

இந்திய நீர்மூழ்கிகளிலன இந்தியத் தயாரிப்பு Fuel Cell based Air Independent Propulsion (AIP) அமைப்பு பொருத்தப்படும் என டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார்.இந்த அமைப்பு விரைவில் தயார் ஆகும் எனவும் இது ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கியில் பொருத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

2025ம் ஆண்டு கல்வாரி ரக நீர்மூழ்கிகள் பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படும்.அந்த நேரத்தில் இந்த நீர்மூழ்கிகளுக்கு இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாக மேம்படுத்தியுள்ள AIP அமைப்பு பொருத்தப்படும் என டிஆர்டிஓ தலைவர் சதீஸ் ரெட்டி அவர்கள் கூறியுள்ளார்.

இந்த அமைப்பு மேம்பாட்டில் Larsen & Toubro மற்றும் Thermax நிறுவனங்களும் டிஆர்டிஓ-வின் Naval Materials Research Laboratory (NMRL) நிறுவனமும் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

Air independent propulsion அல்லது AIP அமைப்பு நீர்மூழ்கிகளை நீண்ட காலம் நீருக்குள்ளயே வைத்திருக்க உதவும் அமைப்பு ஆகும்.இவற்றில் நிறைய ரகங்கள் இருப்பினும் Fuel Cell அடிப்படையாக கொண்ட AIP அமைப்பு சிறந்ததாக கருதப்படுகிறது.இந்தியாவும் இதே தொழில்நுட்பத்தில் தான் உருவாக்கி வருகிறது.