உக்ரேன்-இரஷ்ய போரால் IL-76 விமானம் அப்கிரேடு பாதிப்பு

இரஷ்ய உக்ரேன் மோதலால் இந்திய விமானப்படையின் IL-76MD விமானத்தின் அப்கிரேடு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.புதிய தகவல்தொடர்பு அமைப்பு, நேவிகேசன் அமைப்பு, ஏவியோனிக்ஸ் மற்றும் என்ஜின் அப்கிரேடு ஆகியவை விமானத்திற்கு அப்கிரேடு செய்ய இந்திய விமானப்படை திட்டமிட்டது.

இந்திய விமானப்படை தற்போது 14 IL-76MD விமானங்களும் , 6 IL-78MKI விமானங்களும் இயக்கி வருகிறது. IL-76MD விமானங்கள் 1986ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகின்றன.மேலும் தற்போது இந்த விமானங்களை மறுகட்டுமானம் அல்லது அப்கிரேடு செய்தல் அவசியமாகும்.இதன் காரணமாக சில விமானங்களை இயக்கமால் இந்திய விமானப்படை நிறுத்தியுள்ளது.

அதே போல IL-78MKI விமானங்களை நடுவானில் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களாக பயன்படுத்தி வருகிறது விமானப்படை.தற்போது இந்த விமானங்களிலும் சில பிரச்சனைகள் நிலவுகிறது.

இந்த காரணங்களால் இந்திய விமானப்படை IL-76MD விமானங்களை அப்கிரேடு செய்ய முடிவு செய்தது.ஆனால் தற்போது உக்ரேன்-இரஷ்யா பிரச்சனை காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.