ஆறு ஸ்குவாட்ரான் தேஜஸ் மார்க் 2 விமானங்கள்- விமானப்படை உறுதி

இந்திய விமானப்படை ஆறு ஸ்குவாட்ரான் அளவு தேஜஸ் மார்க் 2 விமானங்களை படையில் இணைக்க உறுதி பூண்டுள்ளதாக விமானப்படை தளபதி ஏர்மார்சல் VR சௌதாரி அவர்கள் உறுதிபட கூறியுள்ளார்.விமானங்கள் தயாரிப்பு தொடங்கிய பிறகு மேலதிக விமான ஆர்டர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

விமானப்படை AMCA மற்றும் LCA MK-1A மற்றும் LCA MK-2 விமானங்களை இன்னும் சில வருடங்களில் படையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்தியா தற்போது மேம்படுத்தி வரும் ஐந்தாம் தலைமுறை விமானத்தையும் ஏழு ஸ்குவாட்ரான்கள் அளவு படையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் திட்டமிட்டபடி படையில் இணைக்கப்பட்டு வருவதாகவும் தளபதி கூறியுள்ளார்.முதல் யூனிட் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இரண்டாம் யூனிட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் விமானப்படை உள்ளது.