1 min read
ரபேல் சுகாய் விமானங்களுடன் லடாக்கில் விமானப்படை மாபெரும் போர்பயிற்சி
எல்லைக்கு மறுபுறம் சீனா போர்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் தற்போது இந்திய விமானப்படையும் லடாக்கில் மாபெரும் போர் பயிற்சி ஒன்றை நடத்தி வருகிறது.
ரபேல் , சுகாய் உள்ளிட்ட நவீன விமானங்களுடன் பலவித போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மேலும் இரவுநேரத் தாக்குதல்களை முன்னிறுத்தியும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிழக்கு லடாக்கிற்கு மறுபுறம் சீன விமானப்படையும் தற்போது போர்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.ஹோட்டன் மற்றும் கல் குன்சா போன்ற தளங்களில் சீனா அதிநவீன விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது.