30 தேஜஸ் விமானங்களை விமானப்படைக்கு டெலிவரி செய்துள்ள ஹால் – முழுத் தகவல்கள்

  • Tamil Defense
  • July 12, 2022
  • Comments Off on 30 தேஜஸ் விமானங்களை விமானப்படைக்கு டெலிவரி செய்துள்ள ஹால் – முழுத் தகவல்கள்

இந்திய விமானப்படைக்காக ஆர்டர் செய்யப்பட்டிருந்த 32 ஒற்றை இருக்கை தேஜஸ் விமானங்களில் 30 விமானங்கள் தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக ஹால் நிறுவனத்தில் தலைவர் மாதவன் அவர்கள் கூறியுள்ளார்.

மீதமுள்ள விமானங்களில் ஒரு விமானம் டெலிவரி செய்யப்பட தயாராக இருப்பதாகவும், ஒரு விமானம் சோதனைக்கு பிறகு அடுத்த மாதம் டெலிவரி செய்யப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது ஹால் தயாரிப்பு வரிசை விமானப்படைக்காக ஆர்டர் செய்யப்பட்டு 18 தேஜஸ் பயிற்சி விமானங்களை தயாரித்து வருகிறது.இவற்றில் முதல் தொகுதி நான்கு விமானங்கள் இந்த வருடமும் மீதமுள்ளவை 2024 ல் டெலிவரி செய்யப்பட உள்ளது.

தேஜஸ் மார்க்1ஏ விமானம் அடுத்த வருடம் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு 2024 முதல் விமானங்கள் தயாரிக்கப்படும் எனவும் ஆர்டர் செய்யப்பட்டுள்ள 73 விமானங்கள் 2028-29க்குள் முடிக்கப்படும்.