தேஜசை பலம்மிக்கதாக மாற்ற உள்ள 5 முக்கிய ஆயுதங்கள்

  • Tamil Defense
  • July 4, 2022
  • Comments Off on தேஜசை பலம்மிக்கதாக மாற்ற உள்ள 5 முக்கிய ஆயுதங்கள்

1 ) பிரம்மோஸ் NG
2) ருத்ரம் 3
3) அஸ்திரா MK2&3
4) STAR அடிப்படை Anti-Radiation/ AWACS ஏவுகணை
5) அஸ்திரா CCM

பிரம்மோஸ் NG.

பிரம்மோசின் அடுத்த தலைமுறை ஏவுகணை இன்னும் 3-5 வருடங்களில் தயாராகும்.இந்த ஏவுகணை நெருங்கி ஹைப்பர்சோனிக் வேகத்திற்கு அதாவது மாக் 4.5 வேகத்தில் செல்லக்கூடியதாக அமையும்.

ருத்ரம் 3

விமானத்தில் ஏவப்படக்கூடிய ஹைப்பர் சோனிக் வேகத்தில் செல்லக்கூடிய குவாசி பலிஸ்டிக் ஏவுகணை தான் இந்த ருத்ரம் 3 ஏவுகணை.மாக் 5 வேகத்தில் 550கிமீ வரை செல்லக்கூடியது ஆகும்.

STAR
அவாக்ஸ் விமான எதிர்ப்பு மற்றும் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணை தேஜஸ் விமானத்திற்காக மேம்படுத்தப்பட்டு வருகிறது. 55 – 175 Km வரை சென்று தாக்க கூடியது மற்றும் 1.8 முதல் 2.5 மாக் வேகத்தில் செல்லக்கூடியது.

அஸ்திரா MK2 & MK3

அஸ்திரா MK2 160 தூரமும் மற்றும் அஸ்திரா MK3 340கிமீ தூரமும் சென்று தாக்குதல் நடத்தக்கூடியது ஆகும்.வான்-வான் ஏவுகணையான இது எதிர்காலத்தில் தேஜஸ் விமானத்தில் இணைக்கப்படும்.

அஸ்திரா CCM

dual band passive imaging infrared seeker கொண்ட இந்த ஏவுகணை 500m முதல் 60 Km வரை சென்று தாக்க கூடியது ஆகும்.இது தவிர Scalp ஏவுகணை போல ஒரு ஸ்மார்ட் ஸ்டீல்த் க்ரூஸ் ஏவுகணை மேம்பாட்டில் உள்ளது.இது 300-550 Km வரை சென்று தாக்கும்.