செயல்பாட்டுக்கு வந்த முதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு – விமானப்படை தளபதி

  • Tamil Defense
  • July 20, 2022
  • Comments Off on செயல்பாட்டுக்கு வந்த முதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு – விமானப்படை தளபதி

இந்திய முதல் யூனிட் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் இரண்டாம் யூனிட் அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டுவர உள்ளதாகவும் விமானப்படை தளபதி கூறியுள்ளார்.

எஸ்-400 அமைப்புகளை படையில் இணைப்பது திட்டமிட்டபடி நடந்து வருகிறது.
அடுத்த வருட இறுதிக்குள் இந்தியா அனைத்து எஸ்-400 அமைப்புகளையும் பெற்றுவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு முனைப் போரை சமாளிக்கும் அளவுக்கு இந்திய விமானப்படை தயாராக உள்ளதாகவும் , இதற்காக பல்வேறு தளவாடங்களை படையில் இணைத்து விமானப்படையின் வலிமை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலதிகள் ரேடார்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.