இந்தியாவின் AMCA விமானத்திற்கு கூட்டுத் தயாரிப்பு என்ஜினா ? பேச்சுவார்த்தை

இந்தியா தற்போது சொந்தமாக தனது ஐந்தாம் தலைமுறை விமானமான AMCA விமான மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.இதற்காக இந்தியா பிரான்ஸ் நாட்டின் Safran நிறுவனத்துடன் புதிய 110 kN திறன் கொண்ட என்ஜினை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் Safran நிறுவனம் இதற்கான திட்டத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.இதன் படி இந்தியாவின் DRDO நிறுவனத்தின் கீழ் வரும் Gas Turbine Research Establishment (GTRE) நிறுவனத்துடன் இணைந்து 110 kN thrust திறன் கொண்ட என்ஜினை தயாரிக்கும்.

தற்போதூ இந்த திட்டம் குறித்து DRDO பரிசீலனை செய்து வருகிறது.இணைந்து தயாரிக்க ஆகும் செலவு, தொழில்நுட்ப பறிமாற்றம் மற்றும் ஏற்றுமதிக்கான உரிமம் ஆகியவை குறித்து டிஆர்டிஓ பரிசீலனை செய்து வருகிறது.

கடந்த 5 ஜீலை அன்று
Safran நிறுவன அதிகாரிகள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.