கடந்த மூன்று அல்லது நான்கு வாரங்களாக சீனப்போர்விமானங்கள் இந்திய எல்லைக்கு மிக அருகே பறந்து இந்தியாவின் பொறுமையை சோதித்து வருகின்றன.இந்திய விமானப்படையின் இதற்கு தகுந்த பதில் நடவடிக்கை தவரவில்லையெனினும் சீனாவின் இந்த போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சீனாவின் ஜே-11 உட்பட நவீன போர்விமானங்கள் இந்திய எல்லைக்கு அருகே பறக்கின்றன.இவற்றிற்கு எதிராக இந்தியாவும் மிராஜ்-2000 மற்றும் மிக்-29 விமானங்களை முன்னனி நிலைகளில் இருந்து அனுப்புகிறது.கிழக்கு லடாக்கில் இந்தியாவின் புதிய கட்டமைப்புகள் குறித்து சீனா பதற்றமடைந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்தியா எல்லைக்கட்டுமான பணிகளை துரிதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜீன் 24-25 வாக்கில் தொடங்கிய சீனாவின் அத்துமீறல் தற்போது வரை தொடர்கிறது.
தற்போது இந்திய விமானப்படை ரபேல் உள்ளிட்ட அதிநவீன விமானங்களின் உதவியுடன் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.ஜீலை 17 அன்று நடைபெற்று கமாண்டர்கள் சந்திப்பின் போதும் இந்தியா இந்த விவகாரத்தை சீனர்களிடம் எடுத்து கூறியது குறிப்பிடத்தக்கது.