இந்திய எல்லைக்குள் பறந்த சீனப் போர் விமானம் – நடந்தது என்ன ?
சீன விமானப்படையின் போர் விமானம் ஒன்று கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லைக்கு மிக அருகே கடந்த வாரம் பறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்திய விமானப்படை தனது போர்விமானங்களை அனுப்பி சீன விமானத்தை விரட்டி அடித்துள்ளது.
இந்திய எல்லைக்குள் விமானம் நுழைந்ததை தரையில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர் மற்றும் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரேடாரில் சீன விமானம் நுழைந்தது தெரிந்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது போர் விமானங்கள் மற்றும் எஸ்-400 அமைப்புகளுடன் தற்போது போர்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நேரம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்திய எல்லைக்கு அருகே உள்ள சீன தளங்களலான ஹோடான் மற்றும் குன்சா ஆகிய இடங்களில் சீனா அதிகமாக போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வான் மோதலுக்கு பிறகு இந்திய விமானப்படை லடாக்கில் தனது பலத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.எல்லையில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பட்சத்தில் இந்தியப் படைகள் குறைந்த நேரத்தில் பதிலடி கொடுக்கும்.இதற்கான எல்லைக் கட்டுமானங்களையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.