தைவானுக்கு நேர் எதிரே போர் ஒத்திகை நடத்தும் சீனா !!
1 min read

தைவானுக்கு நேர் எதிரே போர் ஒத்திகை நடத்தும் சீனா !!

சீனா விரைவில் தைவானுக்கு நேர் எதிரான பகுதியில் போர் ஒத்திகையை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது மேலும் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் தைவானுக்கு செல்லவும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது.

அதாவது அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோஸி தைவான் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தைவான் சீனாவுக்கு சொந்தமான பகுதி எனவும் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த பயிற்சியில் வழக்கமாக பயன்படுத்தப்படும் பிரங்கிகள் இடம்பெற்றன அவை தவிர வேறு தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அவ்வப்போது சீனா தைவானுக்கு சொந்தமான வான்பகுதி மற்றும் கடற்பகுதியில் தனது போர் விமானங்கள் போர் கப்பல்கள் மற்றும் ரோந்து கலன்களை அனுப்பி அத்துமீறுவது வழக்கம்.