இந்திய கடற்படையின் போர்விமான ஒப்பந்தத்தை பெறுவோம்- போயிங் நம்பிக்கை
1 min read

இந்திய கடற்படையின் போர்விமான ஒப்பந்தத்தை பெறுவோம்- போயிங் நம்பிக்கை

இந்தியா தனது கடற்படைக்காக புதிய விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்கக்கூடிய விமானங்களை வாங்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்தப் போட்டியில் போயிங் நிறுவனத்தின் F/A-18E/F Super Hornet Block III விமானமும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் Dassault Rafale M விமானமும் போட்டியில் உள்ளன.

இந்த ஒப்பந்தத்தை நாங்கள் பெறுவோம் என போயிங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.வெற்றி பெறும் நிறுவனத்திடம் இருந்து இந்தியா 50+ போர்விமானங்களை பெறும்.இதற்காக போட்டியில் இரு நிறுவனங்களின் விமானங்களும் உள்ளன.

இரு விமானங்களின் திறனையும் இந்தியா சோதனை செய்துள்ளது.இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.தேர்ந்தெடுக்கப்படும் விமானம் நமது புதிய விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் இருந்து பறக்கும்.