தேஜஸ் விமானங்கள் வாங்க ஆர்வம் காட்டும் ஆசியான் நாடுகள் – ஹால் தலைவர் மாதவன்

ஹால் தயாரிப்பு தளவாடங்களை வாங்க பல்வேறு ஆசியான் நாடுகள் ஆர்வமாக உள்ளதாக ஹால் தலைவர் ஆர் மாதவன் அவர்கள் கூறியுள்ளார்.குறிப்பாக தேஜஸ் மற்றும் இலகுரக தாக்கும் வானூர்திகள் வாங்க பல நாடுகள் ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 2022ல் சிங்கப்பூர் விமான கண்காட்சியில் தேஜஸ் விமானம் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக தனது திறனை காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா,லாவோஸ்,தாய்லாந்து,புருனே, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், கம்போடியா,வியட்நாம் மற்றும் மியான்மர் ஆகிய பத்து நாடுகளும் ஆசியான் நாடுகள் எனப்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் நமது பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை ஆர்டர் செய்து வாங்கியுள்ளது.தற்போது இந்தியத் தயாரிப்பு விமானங்கள் மற்றும் வானூர்திகள் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஒரு ஆசியான் நாடு இந்தியத் தயாரிப்பு த்ருவ் வானூர்திகளை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.